காஷ்மீரில் திடீர் பேரழிவு.. கண்முன்னே அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்.. 23 பேர் பரிதாப பலி.. இணையத்தில் வைரலாகும் திகிலூட்டும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காஷ்மீரில் திடீர் பேரழிவு.. கண்முன்னே அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்.. 23 பேர் பரிதாப பலி.. இணையத்தில் வைரலாகும் திகிலூட்டும் வீடியோ..!!

Published

on

இயற்கையின் சீற்றம் ஜம்மு காஷ்மீரைப் பலத்த சேதத்திற்கு உள்ளாக்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை பெய்த கனமழை காரணமாக ஆறுகளும் ஓடைகளும் சீறிப்பாய்ந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததோடு, நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், தொடர் நிலச்சரிவுகளால் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பேரழிவின் திகிலூட்டும் பல காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை மழை தொடங்கியதிலிருந்து பூஞ்ச், ராஜௌரி, டோடா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்; 7 பேரைக் காணவில்லை. கதுவா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்ட நிலையில், ஜம்மு பிரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். SDRF மற்றும் NDRF குழுக்கள் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து இரவு பகலாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in