20 வருஷ கல்யாண வாழ்க்கை.. காதலனுடன் ஓடிய 3 குழந்தைகளின் தாய்.. நடுரோட்டில் நின்ற கணவனுக்காக நீதிமன்றத்தின் அதிரடி ஆக்ஷன..!! – cinefeeds
Connect with us

CRIME

20 வருஷ கல்யாண வாழ்க்கை.. காதலனுடன் ஓடிய 3 குழந்தைகளின் தாய்.. நடுரோட்டில் நின்ற கணவனுக்காக நீதிமன்றத்தின் அதிரடி ஆக்ஷன..!!

Published

on

ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் – ரேகா தம்பதியருக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியிருந்தன. இரண்டு குழந்தைகளுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், ரேகா திடீரென தனது கணவர் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து சென்றுள்ளார். சதிஷ் என்ற நபருடன் வீட்டை விட்டு வெளியேறிய அவர், மறுமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. இருபது காலத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு நடந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு மணீஷுக்கும் ரேகாவுக்கும் திருமணம் நடந்து இரு மகன்கள் உள்ள நிலையில், குடும்பத் தலைவரான மணீஷ் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த காலத்தில் சதிஷ் என்பவர் ரேகாவுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென ஒருநாள் தனது தந்தை மற்றும் சகோதரனுடன் வீட்டை விட்டு வெளியேறிய ரேகா, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் சதிஷை மறுமணம் செய்துகொண்டு அதுதொடர்பான புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்; இதைக் கண்டு மணீஷ் பெரும் அதிர்ச்சியடைந்தார்.

தன் மனைவிக்கு வேறொருவருடன் திருமணம் நடந்ததை அறிந்த மணீஷ், தனது குழந்தைகளுடன் அங்கு சென்று தட்டிக்கேட்டுள்ளார். ஆனால், அங்குள்ளவர்கள் அவரை மிரட்டி விரட்டியதுடன், மணீஷின் ஆறு ஏக்கர் விளைநிலம் மற்றும் வீட்டையும் ஏமாற்றி அபகரித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தனது குழந்தைகளுடன் வீதிக்கு வந்த மணீஷ், தனக்கு நீதி வேண்டி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்ட ஹிசார் நீதிமன்றம், ரேகா, அவரது புதிய கணவர் சதிஷ் மற்றும் இந்தச் சதிக்கு உடந்தையாக இருந்த குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளதுடன், வரும் நவம்பர் 25, 2026-க்குள் அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in