LATEST NEWS
“அடேங்கப்பா… செம ஆப்பு..!”.. ஐபோன் கேட்டா பியர்டு ஆயிலா தருவீங்க?.. பிளிப்கார்ட்டுக்கு நீதிமன்றம் கொடுத்த சம்மட்டி அடி… 3 வருஷம் கழிச்சு நடந்த அதிரடி திருப்பம்..!!!
மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 2023-ஆம் ஆண்டு Flipkart இணையதளத்தில் ரூ.1.11 லட்சம் மதிப்புள்ள ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு போனுக்கு பதிலாக தாடி வளர்க்கும் எண்ணெய் பார்சலில் டெலிவரி செய்யப்பட்டு அதிர்ச்சி அளித்துள்ளது. இதுகுறித்து அவர் நிறுவனத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அவரது புகாரை மறைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், Flipkart நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஐபோனுக்கான தொகையுடன் சேர்த்து, கடந்த 3 ஆண்டுகளுக்கான 9% வட்டியையும் சேர்த்து, மொத்தமாகச் சுமார் ரூ.1.80 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
