LATEST NEWS
“நான் உன்னை கல்யாணம் பண்ண மாட்டேன்..” நிச்சயதார்த்தம் முடிந்த பின் போனில் வந்த அந்த ஒரு வார்த்தை… மனமுடைந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. கதறி துடிக்கும் பெற்றோர்..!!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் ரத்து செய்யப்பட்டதால், மன அழுத்தத்திற்கு ஆளான விஜயஸ்ரீ என்ற இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புண்டாக் ஓபி எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த இவர், பெங்களூருவில் உள்ள ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்தார். விஜயஸ்ரீக்கும் அஞ்சன் சௌத்ரி என்பவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு செய்து, நிச்சயதார்த்தமும் முடிந்து, திருமணத்திற்கான மண்டபமும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17 அன்று மாப்பிள்ளை அஞ்சன் சௌத்ரி தொலைபேசி மூலம் தான் விஜயஸ்ரீயை திருமணம் செய்ய விரும்பவில்லை என்றும், திருமணத்தை நிறுத்துவதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விஜயஸ்ரீயின் குடும்பத்தினர் அவரைத் தொடர்புகொண்டு பேசிச் சம்மதிக்க வைக்க பலமுறை முயற்சி செய்தும், அவர் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளான விஜயஸ்ரீ, செப்டம்பர் 18 அன்று பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
செப்டம்பர் 19 அன்று விஜயஸ்ரீயின் தங்கை பலமுறை போன் செய்தும் அவர் போனை எடுக்காததால், சந்தேகமடைந்த தந்தை வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது, விஜயஸ்ரீ மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில், மாப்பிள்ளை அஞ்சன் சௌத்ரி, அவரது பெற்றோர் லலன் பிரசாத் சௌத்ரி, ரீதா சௌத்ரி மற்றும் மற்றொருவர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்து புண்டாக் ஓபி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
