CRIME
2-வது கல்யாணத்துக்கு ரெடியான கணவன்.. தாலி கட்டும் நேரத்தில் நுழைந்த முதல் மனைவி.. கடைசியில் நடந்த அந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி..!!
ஆந்திர மாநிலம் திருமலையில் பணியாற்றி வரும் சம்பூர்ணம்மா என்பவரின் மகளைத் திருமணம் செய்த சுனில், சில மாதங்களுக்கு முன்பு எவ்வித காரணமுமின்றி மனைவியைப் பிரிந்து சென்றார். சுனில் மீது வரதட்சணை கொடுமை வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், அவர் மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்ய திருப்பதி-திருச்சானூர் சாலையில் உள்ள பத்மாவதி கல்யாண மண்டபத்திற்கு வருவதாகச் சம்பூர்ணம்மாவிற்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தன் மகளின் முதல் திருமணத்திற்கு முக்கியப் புள்ளியாக இருந்த முனிரத்னம் மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கு அவர் விவரத்தைக் கூற, அவர்கள் இருவரும் உடனடியாகத் திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்று சுனிலின் 2-வது திருமணம் குறித்து நியாயம் கேட்டுத் தட்டிப் பிடித்துள்ளனர்.
அங்கு வெடித்த வாக்குவாதம் வன்முறையாக மாறியதில், புதுமாப்பிள்ளை சுனிலின் சகோதரர் மற்றும் உறவினர்கள் ஒன்றுதிரண்டு முனிரத்னம், மணிகண்டன் ஆகிய இருவர் மீதும் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தினர். இதில் முனிரத்னம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மணிகண்டன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த அதிர்ச்சியூட்டும் இரட்டை கொலை சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்த போலீசார், புதுமாப்பிள்ளை சுனில் உட்பட 3 பேரைக் பிடித்து தீவிர விசாரணை நடத்தி, அவர்களை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
