இன்ஜினியரிங்னா இதுதான்! ஐஐடி மாணவர்கள் செய்த மிரட்டலான ஜுகாட்- வீடியோ வைரல்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இன்ஜினியரிங்னா இதுதான்! ஐஐடி மாணவர்கள் செய்த மிரட்டலான ஜுகாட்- வீடியோ வைரல்..!

Published

on

ரூர்க்கி ஐஐடி வளாகத்தில் பெய்த கனமழையினால் கேம்பஸ் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. மாணவர்கள் சாலைகளில் நடப்பதற்கே சிரமப்படும் வகையில் தண்ணீர் தேங்கியதால், அன்றாட நடவடிக்கைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. பொதுவாக இதுபோன்ற நேரங்களில் பலரும் புகார் அளிப்பதையோ அல்லது உதவிக்காக காத்திருப்பதையோ வழக்கமாகக் கொண்டிருக்க, இந்த மாணவர்கள் முற்றிலும் மாறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்தனர்.

பொறியியல் மாணவர்கள் சும்மா இருப்பார்களா? தங்களுக்குக் கிடைத்த பொருட்களை வைத்து, வெள்ளத்தில் பயணம் செய்வதற்காக ஒரு தற்காலிகப் படகையே அவர்கள் உருவாக்கிவிட்டனர். தங்கள் படிப்பின் நுட்பங்களையும், இந்தியர்களின் ‘ஜுகாட்’ முறையையும் இணைத்து, அவர்கள் செய்த இந்த முயற்சி, இக்கட்டான சூழ்நிலையிலும் எப்படி புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமானது.

Advertisement

இவர்களது படகுப் பயணத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. “இன்ஜினியரிங்னா இதுதான்” என்று நெட்டிசன்கள் பலரும் இந்த மாணவர்களின் வேகத்தையும், நகைச்சுவை உணர்வையும் பாராட்டி வருகின்றனர். ஒரு சவாலான சூழலைக்கூட, தங்களின் படைப்பாற்றலால் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக மாற்றிய இந்த மாணவர்களின் செயல், இணையத்தில் தற்போது டிரெண்டிங் டாப்பிக்காக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in