“விஜய்க்கு அடுத்தடுத்து வரும் சோதனைகள்..! இரண்டாக உடையும் தவெக கட்சி… பின்னணி என்ன..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விஜய்க்கு அடுத்தடுத்து வரும் சோதனைகள்..! இரண்டாக உடையும் தவெக கட்சி… பின்னணி என்ன..?!

Published

on

அதிமுகவிலிருந்து தவெக கட்சியில் இணைந்தவர்கள் ஒரு அணியாகவும், தவெகவின் அசல் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றொரு அணியாகவும் என கட்சி தற்போது இரண்டாக உடைந்துள்ளதாக ஒரு தனியார் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

அதிமுகவில் இருந்து தவெக கட்சியில் இணையும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பண பலம், உள்ளூர் செல்வாக்கு மிக்கவர்களாக விளங்குகின்றனர். இதன் காரணமாக, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முதல் மாவட்டச் செயலாளர் பதவி வரை அனைத்திலும் அவர்களின் கையே ஓங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தவெகவின் ஆரம்பகால நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது அதிருப்தியைப் புலம்பி வருவதாகத் தெரிகிறது.

Advertisement

கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த உள்கட்சிப் பூசல் மற்றும் புதியவர்களின் ஆதிக்கம் பழைய நிர்வாகிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் தலைவரான விஜய், கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த அணியினரின் மோதலையும், நிர்வாகிகளின் அதிருப்தியையும் எவ்வாறு கையாண்டு சமளிக்கப் போகிறார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in