VIDEOS
கே ஜி எஃப் சாதனையை தூசி தட்டும் சலார்… 24 மணி நேரத்தில் 100 மில்லியன்… கெத்து காட்டும் பிரசாந்த் நீல்..!!
பிரசாத் நீர் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் நடித்துள்ள சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. பிரம்மாண்ட இயக்குனரான பிரசாந்தியில் கேஜிஎப் திரைப்படத்திற்கு பிறகு இயக்கியுள்ள திரைப்படம் தான் சலார். ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்ச அளவில் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிரித்திவிராஜ் மற்றும் ஜெகபதிபாபு உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. முதலில் இந்த திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 22ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு நேற்று வெளியிட்ட நிலையில் 18 மணி நேரத்தில் youtubeல் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தெலுங்கில் 25 மில்லியன், இந்தியில் 41 மில்லியன், தமிழில் 7.4 மில்லியன், கன்னடத்தில் 8.4 மில்லியன், மலையாளத்தில் 6.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிவேகமாக ஒரு மில்லியன் லைக்குகளை பெற்ற வீடியோ என்ற சாதனையையும் இந்த படத்தின் டிரைலர் பெற்றுள்ளது.