சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளுமோ அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன. மிமிக்ரி செய்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக அயலான் திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அடிக்கடி நடிகர்களின் அன்சீன் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரமாகி வருகிறது.