“என்னை கருணை கொலை செய்திடுங்கள்…” என் மனைவி பிள்ளைகளையும்…! தொடர் தொந்தரவால் கண்ணீரில் கணவர்… பகீர் கிளப்பும் சம்பவம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னை கருணை கொலை செய்திடுங்கள்…” என் மனைவி பிள்ளைகளையும்…! தொடர் தொந்தரவால் கண்ணீரில் கணவர்… பகீர் கிளப்பும் சம்பவம்…!!

Published

on

குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த கிரிட் படேல் என்ற நபர், தனக்குக் ‘கருணைக் கொலை’ செய்ய அனுமதி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிட் படேலின் தற்போதைய மனைவிக்கு அவர் மூன்றாவது கணவர் ஆவார். குடும்பத் தகராறுகளுக்குப் பிறகு, சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தித் தன் மீது பொய் வழக்குகளைத் தொடுத்து, முந்தைய கணவர்களைப் போலத் தன்னிடமும் பணம் பறிக்க மனைவி முயல்வதாகப் படேல் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தனது முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த மகனுக்குத் தனது தற்போதைய மனைவி வன்முறை மூலம் தீங்கு விளைவிக்க முயன்றதாகவும், இதுகுறித்து ஆதாரங்களுடன் பலமுறை புகார் அளித்தும் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய மறுத்துவிட்டதாகவும் அவர் தனது மனுவில் வேதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

நீதிமன்றம் மற்றும் அரசு அலுவலகங்களுக்குப் பலமுறை அலைந்தும் வெற்று வாக்குறுதிகளே கிடைத்ததாகக் கூறும் அவர், திருமணத் தகராறுகளில் ஆண்களுக்கான சட்டப் பாதுகாப்பின்மை குறித்துக் கடும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். சட்டங்கள் ஒருதலைப்பட்சமாகத் துஷ்பிரயோகம் செய்யப்படும்போது, தங்களைப் போன்ற பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு நீதி கிடைக்கப் பல ஆண்டுகள் ஆவதோடு கடுமையான சமூக மற்றும் மன ரீதியான சித்திரவதைகளை அனுபவிக்க நேரிடுவதாகக் குமுறியுள்ளார்.

மாவட்ட நிர்வாகம் தனது நியாயமான குறைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணாவிட்டால், தான் தற்கொலை போன்ற தீவிரமான முடிவை எடுக்க நேரிடும் என்றும், அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டதால் தனக்குக் கருணைக் கொலைக்கு அனுமதியளிக்க வேண்டும் என்றும் ஆட்சியர் அலுவலக முத்திரையுடன் பெறப்பட்ட அந்த மனுவில் அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in