மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! கூடுதலாக பணம் கேட்டால் FIR… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! கூடுதலாக பணம் கேட்டால் FIR… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Published

on

சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் தொடர்பான வழக்கில் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பணம் வசூலித்தால், நுகர்வோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ள நீதிமன்றம், அவ்வாறு அளிக்கப்படும் புகாரின் மீது காவல்துறையினர் உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும், நுகர்வோர் வாங்கும் ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் கட்டாயம் ரசீது வழங்கப்பட வேண்டும் என்பதையும் சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெள்ளத்தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

இதனுடன் சேர்த்து டாஸ்மாக் கடைகளில் நிலவும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது குறித்தும் உயர் நீதிமன்றம் முக்கிய வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. அதிகளவில் கூட்டம் கூடும் டாஸ்மாக் கடைகளைக் கண்டறிந்து, அங்கு நிலவும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் காவல்துறையினரை பணியில் நியமிக்க வேண்டும் என தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டும், டாஸ்மாக் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் வகையிலும் சென்னை உயர் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in