LATEST NEWS
“மருந்தா..? இல்ல விஷமா..?” கதறிய தந்தை.. 4 வயது சிறுவன் உயிருடன் விளையாடிய மருத்துவர்கள்.. அரசு மருத்துவமனையில் நடந்த பகீர் கொடுமை..!!
தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் அரசு மருத்துவமனையில், நோய்வாய்ப்பட்ட நான்கு வயது சிறுவனுக்குக் காலாவதியான மருந்து வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திரா நகர் காலனியைச் சேர்ந்த முரளி என்பவர், தனது நான்கு வயது மகன் ஏனோஸ் ராஜிற்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு சிரப் மருந்துகளைப் பரிந்துரைத்தனர். அதில் ஒரு சிரப் மருத்துவமனையிலேயே வழங்கப்பட்ட நிலையில், மற்றொன்றை வெளியே வாங்குமாறு ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
గడువు ముగిసిన మందు ఇస్తే పిల్లాడు చావాలా
మహబూబాబాద్ ప్రభుత్వ ఆసుపత్రిలో పిల్లవాడికి గడువు ముగిసిన మందులు ఇచ్చిన సిబ్బంది
ఆసుపత్రి సిబ్బంది పై బాలుడి తండ్రి ఆగ్రహం
మహబూబాబాద్లోని ఇందిరానగర్ కాలనీకి చెందిన మురళీ తన నాలుగేళ్ల కుమారుడు ఎనోస్ రాజ్కు వాంతులు, విరోచనాలతో… pic.twitter.com/qcnwzsG2Bq— Telugu Scribe (@TeluguScribe) August 7, 2026
வீட்டிற்குச் சென்று குழந்தைக்கு மருந்து கொடுக்கப் பார்த்தபோது, மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட சிரப் கடந்த ஜூன் 2026-லேயே காலாவதியானது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை, உடனடியாக மருத்துவமனைக்குத் திரும்பிச் சென்று ஊழியர்களிடம் தட்டிக்கேட்டபோது இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. “காலாவதியான மருந்தைக் கொடுத்து என் குழந்தை இறந்துவிட்டால் யார் பொறுப்பு?” என்று ஆத்திரத்துடன் தந்தை எழுப்பிய கேள்வி, அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கை அம்பலப்படுத்தியதோடு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
