LATEST NEWS
“அடடே.. இதுவல்லவா உண்மைக்காதல்..!” 215 ஆபரேஷன்களைக் கடந்த பெண்ணைக் கரம்பிடித்த நிஜ கதாநாயகன்.. நெட்டிசன்களைக் கண்ணீர் சிந்த வைத்த லவ் ஸ்டோரி..!!
கோடியில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் ‘செரோடெர்மா பிக்மெண்டோசம்’ எனும் அரிதான தோல் நோயால் பாதிக்கப்பட்ட பிரேசில் நாட்டைச் சேர்ந்த கரின் டி சோஸா என்பவரின் நெஞ்சை நெகிழ வைக்கும் காதல் கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சூரிய ஒளியில் வெளிப்படும் புற ஊதாக்கதிர்களால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் இந்த நோயின் காரணமாக, அவர் இதுவரை 215-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். இதற்காக அவருடைய உதடு, மூக்கு உள்ளிட்ட முகத்தின் முக்கிய உறுப்புகளும் அறுத்து எடுக்கப்பட்டுள்ளன.
தோற்றத்தைப் பார்த்து உலகமே ஒதுங்கிய நிலையில், கரினின் உண்மையான அன்பைப் புரிந்து கொண்ட எதிர்தரப்புத் தோழர் எட்மில்சன் என்பவர், அவரைத் தீவிரமாகக் காதலித்துத் திருமணமும் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு தற்போது ஒரு அழகிய குழந்தையும் உள்ளது. புறத் தோற்றத்தைக் கடந்து, அகத்தின் அழகை மட்டுமே நேசித்த இந்த ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், “உண்மையான அன்பின் ஆழத்திற்கு முன் அழகு ஒரு பொருட்டே இல்லை” என நெட்டிசன்கள் இவர்களை நெகிழ்ச்சியுடன் பாராட்டி வாழ்த்தி வருகிறார்கள்.
