LATEST NEWS
சமையல் கலையில் சாதிக்க கரண்டி பிடிக்கும் நயன்தாரா… கடைசியில இப்படி ஆயிடுச்சே?… அன்னபூரணி Movie Review…!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருக்கும் நயன்தாரா திருமணத்திற்கு பிறகு நடித்த கனெக்ட் மற்றும் இறைவன் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவிற்கு பெயர் வாங்கித் தரவில்லை. இந்த நிலையில் கோலிவுட் தாண்டி டோலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கி கொண்டிருக்கும் நயன்தாரா மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்பி புதுமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் ஜெய், சத்யராஜ், இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் மற்றும் கார்த்திக் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள நிலையில் பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அன்னபூரணி திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் திருச்சியை சேர்ந்த பிராமண குடும்பப் பெண்ணாக நயன்தாரா நடித்துள்ளார்.
சிறு வயது முதல் உணவை ருசி அறிவதில் விசேஷத் திறமை இருக்கும் அன்னபூரணிக்கு சமைப்பதிலும் அதிக ஆர்வம். இருந்தாலும் கோவில் பிரசாதம் தயாரிக்கும் தன்னுடைய தந்தைக்கு அசைவம் பிடிக்காது என்பதால் அவருக்குத் தெரியாமல் கல்லூரியில் சமையல் கலை நிபுணராக சேர்ந்து நயன்தாரா கல்வி பயில்கிறார். இரண்டாம் பாதியில் விபத்துக்கு பிறகு அவர் தடுமாறும் காட்சிகள் பலரையும் ரசிக்க வைக்கின்றன.
குறிப்பாக சத்யராஜிடம் அவர் பேசும் இடங்கள் ராஜா ராணி திரைப்படத்தை மீண்டும் ஞாபகப்படுத்துகிறது. படத்தின் இறுதி வரை நடிகர் ஜெய் எதற்காக குறுக்க நெடுக்க வருகிறார் என்ற அளவிலேயே இருக்கிறது. இறுதி காட்சியில் ஏதாவது காதல் வசனங்களை யாவது அவருக்கு கொடுத்து இருக்கலாம். நயன்தாராவின் தந்தையாக நடித்திருக்கும் அச்யுத் குமாரின் நடிப்பு ஓரளவு நம்பும் படியாக உள்ளது .
இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அவர் தனது மகளுக்காக உருகும் இடங்களை கூடுதல் காட்சிகளுடன் இயக்குனர் படமாக்கி இருக்கலாம். தொடக்கத்தில் அசைவ உணவுகளை வெறுப்பதாக வரும் காட்சிகளையும் வசனங்களையும் இன்னும் கூடுதல் பொறுப்புணர்வுடன் இயக்குனர் அமைத்திருக்கலாம். பல்கலைக்கழக தேர்வில் தங்கப்பதக்கம் என்ற நயன்தாராவின் தந்தை கடவுளுக்கு சேவை செய்வதற்காக கோவிலில் சமையல் செய்வதாக சொல்லும் இடங்களில் பார்வையாளர்களே அவரை திட்டும் அளவுக்கு காட்சிகள் அமைந்துள்ளன.
கதைக்கு தேவையற்ற அரசியல் வசனங்களால் அன்னபூரணி தடுமாறுகிறாள். பின்னணி இசை அந்த அளவிற்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. கேமராவும் படத்தொகுப்பும் விறுவிறுப்பை கூட்ட இன்னும் கூடுதலாக பணியாற்றி இருக்கலாம். ருசியான சமையலை விரும்பிய அன்னபூரணியை இன்னும் ருசியாக இயக்குனர் கொடுத்து இருக்கலாம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.