LATEST NEWS
நயன்தாராவை அந்த விஷயத்தில் நம்ப வைத்து ஏமாற்றிய பிரபல இயக்குனர்.. உண்மையை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..!!
தென்னிந்திய சினிமா அளவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் இறுதியாக பாலிவுட்டில் தடம் பதித்து ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து youtube மூலம் புகழ்பெற்ற டியூட் விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி திரைப்படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதனிடையே நயன்தாரா ஜவான் படத்தில் எதிர்பார்த்த விஷயங்கள் சில நடக்கவில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளது. அதாவது ஜவான் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்த பல காட்சிகளை இயக்குனர் அட்லி எடிட் செய்து தூக்கி விட்டாராம்.
கதாநாயகி நயன்தாராவாக இருந்தாலும் சேமியா ரோலில் நடித்த தீபிகா படுகோனுக்கு தான் அட்லி முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இதனால் அவர் மீது நயன்தாரா வருத்தத்தில் இருப்பதாகவும் ப்ரோமோஷனில் கலந்து கொள்ள வில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இயக்குனர் அட்லி நயன்தாராவை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.