LATEST NEWS
வாழ்க்கை முழுவதும் விஜய் ஆண்டனி குடும்பத்தில்… உருக்கமாக பேசிய நடிகர் விஷால்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியான நிலையில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இரண்டு வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்ற போது அதில் சமீபத்தில் விஜய் ஆண்டனியின் மகள் உயிரிழந்த நிலையில் அவரது இறப்பு குறித்து விஷால் உருக்கமாக பேசியுள்ளார். அதாவது, நான் எப்போதும் விஜய் ஆண்டனியை ராஜா என்று தான் கூப்பிடுவேன்.
ஹைதராபாத்தில் இருக்கும் போது நானும், எஸ் ஜே சூர்யா சார் மற்றும் ஆதிக்க ரவிச்சந்திரன் அனைவரும் விஜய் ஆண்டனிக்கு நடந்த பேரிழப்பு குறித்து பேசும்போது நமக்கே மனசு இந்த அளவிற்கு கனமாக இருக்கும்போது விஜய் ஆண்டனியின் குடும்பம் எப்படி இதனை எதிர்கொள்ள போகிறது என்று மிகுந்த வருத்தப்பட்டேன். கடவுள் அவர்களின் குடும்பத்திற்கு பக்க பலமாக இருக்க வேண்டும்.
ஒரு இழப்பு என்பது சாதாரண விஷயம் கிடையாது அதிலிருந்து மீண்டு வர நீண்ட நாட்கள் ஆகும். விஜய் ஆண்டனிக்கு மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கடவுள் இதிலிருந்து மீண்டு வருவதற்கான சக்தியை கொடுக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் விஜய் ஆண்டனிக்கு பக்கபலமாக நானும் அவரது குடும்பத்தில் இருப்பேன் என்று விஷால் கூறியுள்ளார்.