46வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் விஷால்… ஷுட்டிங் ஸ்பாட்டில் சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு… வெளியான புகைப்படங்கள்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

46வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் விஷால்… ஷுட்டிங் ஸ்பாட்டில் சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு… வெளியான புகைப்படங்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். திரைப்பட தயாரிப்பாளர் ஜிகே ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர். இவர் பெரும்பாலும் ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதே சமயம் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரின் கீழ் படங்களை தயாரித்து வருகிறார்.

Advertisement

நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக திரையுலகில் நுழைந்த விஷால் அதன் பிறகு நடிகராக செல்லமே திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு மற்றும் தாமிரபரணி என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது பிசியான நடிகராக மாறிவிட்டார்.

Advertisement

தற்போது நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முகத் தன்மை கொண்ட விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கிக் கொண்டு தன்னை இயக்குனராகவும் விரைவில் வெளிப்படுத்த உள்ளார்.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை படத்தில் ஹீரோயினியாக நடித்த பிரியா பவானி சங்கர் தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் புதிய திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிக்கின்றார்.

Advertisement

இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் காரைக்குடியில் நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட விஷால் நேற்று தனது பிறந்த நாளை இயக்குனர் ஹரி, பிரியா பவானி சங்கர் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோருடன் கொண்டாடினார். தற்போது அதை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vishal இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@actorvishalofficial)

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement