சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் சுந்தர்ராஜன் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?.. வெளியான அழகிய குடும்ப புகைப்படம்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் சுந்தர்ராஜன் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?.. வெளியான அழகிய குடும்ப புகைப்படம்..!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகராக திகழ்ந்தவர் தான் சுந்தர்ராஜன். இவர் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் திறமை கொண்டவர். இவர் முதன் முதலில் அன்று சிந்திய ரத்தம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் இவர் பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள் மற்றும் மெல்ல திறந்தது கதவு என பல வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம். அதே சமயம் சுந்தர்ராஜன் இறுதியாக 2013ஆம் ஆண்டு சித்திரையில் நிலாச்சோறு என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இப்படி புகழ்பெற்ற சுந்தர்ராஜன் துர்கா என்ற டப்பிங் கலைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு கார்த்திக், தீபன் மற்றும் அசோக் என மூன்று மகன்கள் உள்ளனர்.

அவர்களில் ஒருவர் கலைஞர் 2004 ஆம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் தற்போது சுந்தரராஜன் தனது மகன்கள் மற்றும் மனைவி மருமகள் என குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.