கோடிகளில் சம்பாதித்தாலும் தன் வேர்களை மறக்காத மனிதர்… நடத்துனராக வாழ்க்கையை தொடங்கிய பெங்களூரு பேருந்து டெப்போவை சுற்றி பார்த்த ரஜினி..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கோடிகளில் சம்பாதித்தாலும் தன் வேர்களை மறக்காத மனிதர்… நடத்துனராக வாழ்க்கையை தொடங்கிய பெங்களூரு பேருந்து டெப்போவை சுற்றி பார்த்த ரஜினி..!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அறியப்படும் ரஜினிகாந்த் பெங்களூரில் நடத்துனராக பணியாற்றிக் கொண்டிருந்தவர். நடத்துனராக இருக்கும்போதே சில மேடை நாடகங்களிலும் இவர் தோன்றியுள்ளார். அப்போது இவரின் நடிப்புக்கு பல பாராட்டுகள் கிடைத்த நிலையில் நடிகர் ஆனால் என்ன என்ற யோசனை ரஜினிக்கு வந்தது.

அந்த யோசனை சரி என்று அவரை நண்பர் ராஜ் பகதூர் தைரியம் கொடுத்த நிலையில் சென்னைக்கு வந்து சினிமா கல்லூரியில் சேர்ந்தார்.

Advertisement

அதன் பிறகு நடிப்பை கற்றுக் கொண்ட ரஜினி கே பாலசந்தர் மூலம் திரையுலகில் நுழைந்தார். சினிமாவில் அறிமுகமான சமயத்தில் அவமானங்களையும் போராட்டத்தையும் முதலில் சந்தித்த ரஜினி தன்னுடைய திறமையாலும் ஸ்டைலாலும் பெரும் வெற்றி பெற்று சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்தை பெற்றார்.

இதுவரை சுமார் 169 திரைப்படங்களில் ரஜினி நடித்துள்ள நிலையில் பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. இறுதியாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி நடித்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

இந்த திரைப்படம் இதுவரை உலக அளவில் சுமார் 525 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்பு நடிகர் ரஜினி இமயமலைக்கு சென்ற நிலையில் அங்கு சென்று வழிபாடுகளை முடித்த பிறகு ஜார்கண்ட் மாநில ஆளுநர் மற்றும் உத்திர பிரதேசம் ஆளுநர் என பல முக்கிய பிரபலங்களை சந்தித்தார்.

அதன் பிறகு அயோத்திக்குச் சென்று ராமர் கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ரஜினி சென்னை திரும்பினார். இந்நிலையில் நடிகர் ரஜினியின் பெங்களூர் சென்றுள்ளார். அங்கு சென்று அவர் தான் நடத்துனராக பணியாற்றிய பெங்களூரு ஜெயநகர் பி எம் டி சி பஸ் டெப்போவுக்கு இன்று காலை சென்றிருந்தார்.

Advertisement

அங்கு சிறிது நேரம் இருந்து அங்கிருந்த ஊழியர்களுடன் கலந்துரையாடி விட்டு அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். தன்னுடைய பழைய நினைவுகளை நினைவு கூர்ந்த ரஜினி அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in