அடிக்கக் கை ஓங்குறீங்களா..? எங்களை கட்டுப்படுத்த முதல்வர் விஜய்யின் ‘ஒரு பார்வை’ போதும்… திமுகவினரை நோக்கி பாய்ந்த அமைச்சர் ராஜ்மோகன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடிக்கக் கை ஓங்குறீங்களா..? எங்களை கட்டுப்படுத்த முதல்வர் விஜய்யின் ‘ஒரு பார்வை’ போதும்… திமுகவினரை நோக்கி பாய்ந்த அமைச்சர் ராஜ்மோகன்..!!

Published

on

“அடிக்கக் கை ஓங்குறீங்களா..?” எனத் தவெக அமைச்சர் ராஜ்மோகன் தமிழகச் சட்டமன்றப் பேரவையில் திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிராகக் கொந்தளித்துப் பேசியுள்ளார். சட்டப்பேரவை விவாதத்தின் போது தவெக மற்றும் திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலின் போது, தங்களை கட்டுப்படுத்துவதற்கு முதலமைச்சர் விஜய்யின் ஒரே ஒரு பார்வை மட்டுமே போதும் என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். ஆனால், அதற்கு மாறாக திமுகவினர் அடிக்கடி அடிக்கப் பாய்வது போல் நடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, திமுக எம்எல்ஏ உடுமலை ஜெயக்குமார் அடிக்கப் பாய்வது போல் வருவதாகவும், கையை ஓங்குவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் சுட்டிக்காட்டினார். தவெக அமைச்சர்களை நோக்கி திமுக எம்எல்ஏ-க்கள் ஒருமையில் பேசி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் செயல்படும் அந்த திமுக எம்எல்ஏ மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேரவையில் வலியுறுத்தினார்.

Advertisement

சட்டப்பேரவையில் தவெக மற்றும் திமுக இடையே நாளுக்கு நாள் அரசியல் மோதல் வலுத்து வரும் சூழலில், அமைச்சர் ராஜ்மோகனின் இந்த நேரடிப் புகார் அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் பெயரைக் குறிப்பிட்டு, தங்களின் ஒழுக்கத்தைக் கோடிட்டுக் காட்டிய அமைச்சரின் உரை தற்போதைய அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in