LATEST NEWS
“என்ன கத்தினாலும்… கனவு கண்டாலும்… இனி ஆட்சிக்கு வர முடியாது..!” சட்டசபையில் திமுகவை சாடிய அமைச்சர் ஆனந்தின் காரசார உரை..!!
தமிழக சட்டசபையில் நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது சட்டசபையில் காரசாரமான விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய அமைச்சர் ஆனந்த், தமிழக சட்டசபையில் இன்று என்ன கத்தினாலும், என்ன கனவு கண்டாலும் திமுக இனி எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது என்று விமர்சித்துப் பேசினார். மேலும், நாங்கள் யாரும் தவறு செய்ய மாட்டோம் என திரும்பத் திரும்ப திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர் மரியவில்சன் பேசுகையில், திமுக ஆட்சிக் காலத்தில் தரமற்ற முறையில் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட பாலம் வெறும் 3 மாதங்களிலேயே இடிந்து விழுந்தது என்று குற்றம்சாட்டினார். அதற்குப் பதிலளித்துப் பேசிய திமுக எம்எல்ஏ எ.வ.வேலு, “வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகவே அணை இடிந்தது. தென்பெண்ணை ஆற்றில் சுமார் 3 லட்சம் கன அடி நீர் கரைபுரண்டு ஓடியதால்தான் அந்தப் பாலம் இடிந்து விழுந்ததே தவிர, வேறொன்றும் இல்லை” என்று விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ், “சோழர் காலத்தில் கட்டப்பட்ட கல்லணை இன்றும் மிகவும் தரமாகவே உள்ளது. ஆனால், நமது காலத்தில் கட்டப்படும் பாலங்கள் 3 மாதங்களிலேயே இடிந்து விழக்கூடிய சூழல் உள்ளது” என்று சுட்டிக்காட்டினார். சட்டசபையில் நடைபெற்ற இந்த நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, பாலங்கள் இடிந்தது தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான காரசார விவாதம் நிலவியது.
