“ஏன்டா இப்படி பண்றீங்க..?” மின்சார ரயிலின் மீது ஏறி நபர் செய்த அலப்பறை.. மரணத்தின் விளிம்பில் 9 நிமிடங்கள்.. இணையத்தில் வைரலாகும் த்ரில்லர் மீட்பு பணி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஏன்டா இப்படி பண்றீங்க..?” மின்சார ரயிலின் மீது ஏறி நபர் செய்த அலப்பறை.. மரணத்தின் விளிம்பில் 9 நிமிடங்கள்.. இணையத்தில் வைரலாகும் த்ரில்லர் மீட்பு பணி வீடியோ..!!

Published

on

மும்பை காட்கோபர் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வழக்கமான கூட்ட நெரிசல் உச்சத்தில் இருந்தபோது ஒரு நபர் திடீரென நடைமேடை எண் 3-ல் நின்றுகொண்டிருந்த மின்சார ரயிலின் கூரை மீது ஏறி நின்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். மாலை 6:33 மணியளவில் நடந்த இந்த எதிர்பாராத செயலால் அதிர்ந்துபோன பயணிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள், உடனடியாக உயர் அழுத்த மின்சாரக் கம்பிகள் மூலம் விபத்து நேரிடலாம் என்பதால் உஷாரானார்கள்.

🚆 రైలు పైకప్పుపైకి ఎక్కిన వ్యక్తి.. 9 నిమిషాల పాటు విద్యుత్ సరఫరా నిలిపివేత

ముంబైలోని ఘాట్‌కోపర్‌ స్టేషన్‌లో మంగళవారం సాయంత్రం పీక్‌ అవర్స్‌లో ఓ గుర్తుతెలియని వ్యక్తి సాయంత్రం 6:33 గంటలకు ప్లాట్‌ఫామ్‌ నంబర్‌ 3లో ఉన్న రైలు పైకప్పుపైకి ఎక్కాడు.

దీంతో ప్రమాదం నివారించేందుకు… pic.twitter.com/jLyQcp0XX0— ముచ్చట్లు | Stories • Voices • Views (@muchatlu_) August 19, 2026

இதனைத் தொடர்ந்து, பெரும் ஆபத்தைத் தவிர்க்கும் பொருட்டு மாலை 6:38 முதல் 6:47 வரை வித்யாவிஹார் மற்றும் காஞ்சூர்மார்க் இடையேயான மத்திய வழித்தடத் தவுன் லைனில் ஓவர்ஹெட் எலக்ட்ரிக் மின் விநியோகம் உடனடியாகத் துண்டிக்கப்பட்டது. சுமார் 9 நிமிடங்கள் மின்சாரம் நிறுத்தப்பட்டு அந்த நபரை பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in