“ஏன் 3 நாள் தடுத்து வச்சீங்க..?” ஆம்புலன்சிலேயே 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. மகனை மடியில் வைத்துக்கொண்டு கதறிய தந்தை.. நெட்டிசன்களை அழவைத்த வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஏன் 3 நாள் தடுத்து வச்சீங்க..?” ஆம்புலன்சிலேயே 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. மகனை மடியில் வைத்துக்கொண்டு கதறிய தந்தை.. நெட்டிசன்களை அழவைத்த வைரல் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் அன்ஷுமன், கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், மூன்று நாட்கள் தாமதமாக மருத்துவர்கள் அவனை லக்னோவிற்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மகனுடன் ஆம்புலன்ஸில் லக்னோ சென்றுகொண்டிருந்தபோது சிறுவனின் உடல்நிலை மோசமானதால், வழியில் பாராபங்கி மாவட்ட மருத்துவமனைக்கு அவனை அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

4 साल का मासूम…डॉक्टरों की लापरवाही से 3 दिन बाद रेफर हुआ, लखनऊ ले जाते वक्त गोद में थम गई सांसें।

उत्तर प्रदेश के बहराइच के 4 साल के अंशुमान को कई दिनों से तेज बुखार था। इलाज बहराइच जिला अस्पताल में चल रहा था। हालत नहीं सुधरी तो डॉक्टरों ने 3 दिन बाद लखनऊ रेफर कर दिया।

पिता… pic.twitter.com/eKFQSsjC4I— Mandeep RajBhar (@MandeepRajBhar9) August 19, 2026

தன் மகனின் திடீர் மரணத்தைக் தாங்க முடியாத தந்தை, தன் மடியில் பிணமாகக் கிடந்த குழந்தையை அணைத்துக்கொண்டு கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண் கலங்கச் செய்தது. “நிலைமை மோசமாக இருந்ததை அறிந்தும் மருத்துவர்கள் ஏன் மூன்று நாட்கள் என்னை மருத்துவமனையில் தடுத்து வைத்தார்கள்? அவர்கள் முன்னதாகவே லக்னோவிற்கு அனுப்பியிருந்தால், என் மகனைக் காப்பாற்றியிருக்கலாமே” என்று தந்தை ஆவேசமாகவும் கண்ணீரோடும் குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவர்களின் இந்த அலட்சியம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in