LATEST NEWS
“இங்க காசு இருக்கிறவங்கதான் உட்காரணும்” உன்ன மாதிரி ஆளுங்க இங்கே உட்காரக்கூடாது… ஏழை முதியவரை அடித்து விரட்டிய இரக்கமற்ற கடைக்காரர்.. கலங்கும் இணையம்..!!
வறுமையின் கொடுமையால் பசியைத் தாங்க முடியாமல் லிட்டி சோக்கா விற்கும் கடைக்குச் சென்ற ஏழை நபர் ஒருவர், அங்கேயே அமர்ந்து பிச்சை எடுத்துச் சாப்பிடத் தொடங்கியுள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த அந்தக் கடையின் உரிமையாளர், எந்தவித இரக்கமுமின்றி அந்த ஏழையைத் தடியால் மிகக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். “இங்கே எங்களது வாடிக்கையாளர்கள் மட்டும்தான் அமருவார்கள், உன்னைப் போன்ற ஏழைகளுக்கு இங்கே இடமில்லை” என்று கூச்சலிட்டபடி, அவரை அங்கிருந்து விரட்டியடித்துள்ளார்.
சுற்றி நின்றவர்கள் இந்த அராஜகத்தைத் தடுத்து நிறுத்தாமல் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்ய, அந்த ஏழை நபர் பயத்தில் கைகூப்பி அழுதபடி அடியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சைப் பதற வைக்கிறது. மனிதநேயமற்ற இந்தத் தாக்குதலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் கடுமையான கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அந்த இரக்கமற்ற கடைக்காரரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
