“இனி எப்போதும் இது தவெக கோட்டைதான்..!” சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ சுதாகர் முழக்கம்.. ஆடிப்போன எதிர்க்கட்சி..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனி எப்போதும் இது தவெக கோட்டைதான்..!” சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ சுதாகர் முழக்கம்.. ஆடிப்போன எதிர்க்கட்சி..!!!

Published

on

சட்டப்பேரவையில் காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ சுதாகர் பேசுகையில், பல ஆண்டுகளாகச் செயல்படாமல் மூடப்பட்டுக் கிடந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைப் புதர் மண்டிக் கிடந்த நிலையிலிருந்து சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார். இதன் மூலமாக மக்களுக்கும் தனக்கும் நேரடித் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், காட்பாடி தொகுதி இனி எப்போதும் தவெக கோட்டையாகத் திகழும் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுக் கூறினார்.

தவெக ஆட்சி அமைந்ததும் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சீரமைப்புப் பணிகள் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய இந்த உரையானது அரசியல் களத்தில் புதிய விவாதங்களையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in