LATEST NEWS
சொல்லவேணாம்னு தான் நினைச்சேன்… ஆனா ஆதாரம் ஆதாரம்னு கேக்குறாங்க… என் டேபிளில் இருக்கும் ‘அந்த’ ஃபைல்.. தி.மு.க-வை அலறவிட்ட முதல்வர் விஜய்யின் சஸ்பென்ஸ் ட்விஸ்ட்..!!
“சொல்லவேணாம்னு தான் நினைச்சேன், ஆனா ஆதாரம் ஆதாரம்னு கேக்குறாங்க; எல்லா ஆதாரமும் என் டேபிள்ல இருக்கு” என்று தமிழக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் மிக ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். தவெக அரசின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கடந்த கால முறைகேடுகள் குறித்த விவாதத்தின் போது, எதிர்க்கட்சியான திமுகவினர் தொடர்ந்து ஆதாரங்களைக் கேட்டு முழக்கமிட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சரின் இந்த அதிரடி கர்ஜனை அவையை உலுக்கியுள்ளது.
திமுகவினரின் தொடர் கூச்சல்களுக்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், தான் ஏதோ போகிற போக்கில் காற்றில் வார்த்தைகளை வீசவில்லை என்றும், எதிர்க்கட்சியினரின் ஒட்டுமொத்த முறைகேடுகளுக்கான கோப்புகளும், முழுமையான ஆதாரங்களும் தனது மேஜையிலேயே தயாராக இருக்கின்றன என்றும் திட்டவட்டமாகக் கூறினார். “எப்போ ஓபன் பண்ணனுமோ அப்ப கரெக்ட்டா எல்லாமே ஓபன் ஆகும்” என அவர் குறிப்பிட்டது, எதிர்க்கட்சி வரிசையினரைச் சற்று அதிர வைத்துள்ளது.
அரசியல் களத்தில் ஆதாரங்களைக் கேட்டு தங்களை முடக்க நினைத்த திமுகவிற்கு, சரியான நேரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் பாயும் என்பதை எச்சரிக்கும் வகையில் முதல்வரின் இந்த உரை அமைந்திருந்தது. முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடிப் பேச்சு தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியதோடு, தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய மிக முக்கிய பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
