LATEST NEWS
2014-ல் ஜெயலலிதா… 2026-ல் விஜய்…! ஆதவ் அர்ஜுனா – சரத் குமார் கருத்தால்.. மீண்டும் சூடாகும் “தமிழகத்தில் இருந்து ஒரு PM” முழக்கம்..!!
விஜய் பிரதமராக வேண்டும் என ஆதவ் அர்ஜுனா மற்றும் சரத் குமார் ஆகியோர் பேசிய கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை உருவாக்கியுள்ளன. இதற்கு முன்பும் 2014 லோக்சபா தேர்தலின் போது தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என்ற குரல்கள் வலுவாக ஒலித்தன. அப்போது அதிமுக தொண்டர்களும் தலைவர்களும் ஜெயலலிதாவை நாட்டின் பிரதமராக்க வேண்டும் என்ற நோக்கில் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு, அதற்கேற்ப பேனர்களையும் மாநிலம் முழுவதும் வைத்திருந்தனர்.
“மோடியா… இந்த லேடியா…” என ஜெயலலிதா எழுப்பிய புகழ்பெற்ற முழக்கம், தேசிய அரசியலுக்கு சவால் விடும் வகையில் அமைந்திருந்தது. தற்போதைய சூழலில், தமிழகத்திலிருந்து பிரதமர் பதவிக்கான குரல்கள் மீண்டும் எழுப்பப்படுவதை அன்றைய அரசியல் நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போக்கு ஏற்பட்டுள்ளது. இது மாநில தலைவர்கள் தேசிய அளவில் தங்களது செல்வாக்கை நிலைநிறுத்த மேற்கொள்ளும் முயற்சிகளின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
