LATEST NEWS
ஐயா..! நீங்க கொடுக்கிற காரை ‘இன்னோவா காராக’ கொடுத்தால் நல்லா இருக்கும்… தவெக எம்.எல்.ஏ சண்முகம் முதல்வருக்கு கோரிக்கை…!!
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் புதிய கார் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து, தங்களுக்கு வழங்கப்படும் காரை ‘இன்னோவா காராக’ வழங்க வேண்டும் என தவெக எம்.எல்.ஏ சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார். தொகுதி சார்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் கார் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினை வரவேற்றுள்ள அவர், ஆய்வுப் பணிகளுக்கு இன்னோவா கார் மிகவும் தோதுவாக இருக்கும் என்பதால் இந்த குறிப்பிட்ட கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ-க்களின் களப்பணிகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு படிகளையும் புதிய கார் சலுகையையும் அறிவித்துள்ள நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினரின் இந்த “இன்னோவா பிளீஸ்” கோரிக்கை அரசியல் வட்டாரத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. கார் சலுகை அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே இந்த பிரத்யேக வாகனக் கோரிக்கை எழுந்துள்ளதால், அரசு எம்.எல்.ஏ-க்களுக்கு என்ன வகையான காரை வழங்கப் போகிறது என்ற விவாதம் தற்போது தொடங்கியுள்ளது.
