LATEST NEWS
என்கிட்டயும் 3, 4 கார் இருக்கு…ஆனா CM விஜய் கொடுத்த கார்ல போனாத்தான் கெத்து.. பேரவையில் மன்னார்குடி MLA காமராஜ் நெகிழ்ச்சி..!!
தன்னிடம் சொந்தமாக 3, 4 கார்கள் இருந்தாலும், முதலமைச்சர் விஜய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் அரசு காரில் பயணிப்பதுதான் தனக்குப் பெருமை என்று மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. காமராஜ் பேரவையில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி ஆய்வுப் பணிகளுக்காகத் தமிழக அரசு சார்பில் புதிய கார் வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்றுப் பேசிய அவர், அரசின் இந்த கௌரவமான சலுகைக்குத் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
சொந்தமாகப் பல்வேறு வாகன வசதிகள் இருந்தாலும், மக்கள் பிரதிநிதியாக அரசு வழங்கும் காரில் பயணிக்கும்போது தொகுதி மக்களிடையே அது ஒரு தனித்துவமான மரியாதையையும், பொறுப்பையும் உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் சமமாக கார் மற்றும் உதவிகளை வாரி வழங்கிய முதலமைச்சர் விஜய்யின் இந்த தாராள மனப்பான்மை, அனைத்துத் தொகுதிகளிலும் மக்கள் பணிகள் தொய்வின்றி விரைவாக நடக்கப் பெரும் ஊக்கமாக இருக்கும் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
