“விளம்பரத்துக்காக குழந்தையைக் கூட்டி வர்றாரா..?” விமர்சனங்களுக்குத் தவெக எம்.எல்.ஏ பல்லவி கொடுத்த நெத்தியடிப் பதில்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விளம்பரத்துக்காக குழந்தையைக் கூட்டி வர்றாரா..?” விமர்சனங்களுக்குத் தவெக எம்.எல்.ஏ பல்லவி கொடுத்த நெத்தியடிப் பதில்..!!

Published

on

சட்டப்பேரவைக்குக் குழந்தையுடன் வருவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு தவெக எம்.எல்.ஏ பல்லவி உணர்ச்சிப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார். பச்சிளம் குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வர முடியாது என்றும், ஒரு தாயின் நிலையைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, தயவுசெய்து கேலி செய்ய வேண்டாம் என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

முன்னதாக, விளம்பரத்துக்காகத்தான் அவர் குழந்தையைத் தூக்கி வருவதாகச் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு விளக்கம் அளித்துள்ள அவர், தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பெண் தலைவர்கள் எதிர்கொள்ளும் யதார்த்தமான சவால்களைச் சுட்டிக்காட்டியதுடன், இது விளம்பரத்துக்காக அல்ல மாறாகத் தவிர்க்க முடியாத சூழ்நிலை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in