LATEST NEWS
அமைச்சர்கள் யார் யார் எங்கெல்லாம் லஞ்சம் வாங்குறாங்க..? லிஸ்ட் என் கையில ரெடியா இருக்கு… பரபரப்பை கிளப்பிய நயினார் நாகேந்திரன்…!!
தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் லஞ்சம் வாங்கும் விவரங்களை விரைவில் ஆதாரங்களுடன் வெளியிடுவோம் என்று பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடியாக எச்சரித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று கடந்துள்ள இந்த 100 நாட்களையும் மக்கள் தங்களுக்குக் கிடைத்த வேதனையான நாட்களாகவே கருதுகிறார்கள் என்று விமர்சித்துள்ளார். மேலும், புதிய அரசின் அமைச்சர்கள் அனைவரும் தங்களது வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டதாகவும், யார் யார் எங்கெல்லாம் வாங்குகின்றனர் என்ற முழுப் பட்டியல் தங்கள் கையில் தயாராக உள்ளதாகவும் அவர் பரபரப்பைக் கூட்டியுள்ளார்.
நயினார் நாகேந்திரனின் இந்த நேரடி ஊழல் குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசு 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அரசின் மீதான தங்களது விமர்சனங்களை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளன. அமைச்சர்கள் மீதான இந்த ஊழல் பட்டியல் குற்றச்சாட்டுக்கு தவெக தரப்பில் இருந்து என்ன மாதிரியான எதிர்வினைகள் வரப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
