LATEST NEWS
“ரூ.3 உயர்வு எல்லாம் பத்தாது.. லிட்டருக்கு குறைந்தது ரூ.7 உயர்த்தணும்..!” CM விஜய் அறிவிப்புக்கு அன்புமணி ராமதாஸ் அதிரடி ரியாக்ஷன்..!!!
தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு ஒன்ற வெளியிட்டார். அதன்படி, ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் பாலுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அடிப்படை கொள்முதல் விலை ரூ.35-ல் இருந்து ரூ.36 ஆகவும், அதற்கான ஊக்கத்தொகை ரூ.3-ல் இருந்து ரூ.5 ஆகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆவின் பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், தற்போதைய சூழலில் இந்த ரூ.3 உயர்வு என்பது போதுமானது அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.10 வரை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை அவர் சுட்டிக்காட்டினார். எனவே, பால் உற்பத்தியாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் அவர்களின் செலவுகளை ஈடுகட்டவும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.7 வரையாவது உயர்த்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் அரசை வலியுறுத்தியுள்ளார்.
