BREAKING : ஓய்ந்தது பிரச்சினை.. அன்புமணிக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றார் ராமதாஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING : ஓய்ந்தது பிரச்சினை.. அன்புமணிக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றார் ராமதாஸ்..!!

Published

on

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் எஸ். ராமதாஸ், தன்னை கட்சியின் தலைவராக அறிவிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கை தற்பொழுது அதிரடியாக வாபஸ் பெற்றுள்ளார். அவருக்கும் அவரது மகனும் பாமாக தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே சில காலமாக நீடித்து வந்த உட்கட்சிப் பூசல் மற்றும் குடும்பப் பிரச்சினைகள் தற்பொழுது சுமுகமாகத் தீர்க்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சட்டப்பூர்வமான முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, தங்களுக்குள் இருந்த மனஸ்தாபங்கள் முற்றிலும் முடிவுக்கு வந்துவிட்டதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் பாமக கட்சிக்குள்ளும், அவர்களது குடும்பத்திற்குள்ளும் நிலவி வந்த நீண்ட நாள் பரபரப்பான அரசியல் விவகாரங்களுக்குத் தற்பொழுது முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in