LATEST NEWS
“மாப்பிள்ளை நீங்கள்தான், ஆனால் நீங்க போட்டிருக்க சட்டை என்னோடது” கிண்டலடித்த அதிமுக.. மாச பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்…!!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, தமிழக வெற்றிக் கழக அரசின் நிதிநிலை அறிக்கை விவாதத்தில் அதிமுக மற்றும் தவெக இடையே சுவாரசியமான விவாதம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் தவெக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. ஆனால், இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் தங்களின் முந்தைய அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை என்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக விமர்சித்துள்ளது.
சட்டப்பேரவையில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓமலூர் மணி, “எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும், அதன் பின்னால் அதிமுக இருக்கும்” என்று கூறினார். மேலும், “மாப்பிள்ளை நீங்கள்தான், ஆனால் நீங்கள் போட்டிருக்கும் சட்டை என்னுடையது என்கிற வசனத்தை நினைவு கூறுகிறேன்” எனக் குறிப்பிட்டு, தவெக அரசு தங்களின் திட்டங்களையே பெயர் மாற்றிப் பயன்படுத்துவதாகக் கிண்டலடித்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய தவெக அமைச்சரான ராஜ்மோகன் ஆறுமுகம், “அம்மா உணவகம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டமாக இருந்தாலும், தவெக ஆட்சியில் தான் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்று சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “மாப்பிள்ளையோ, சட்டையோ அது யாருடையதும் கிடையாது; அது பாமர மக்களுடையது, வாக்காளர்களுடையது; அவர்களுடைய தீர்ப்பு வெற்றித் தலைவருக்கானது” என்று அதிமுகவின் விமர்சனத்திற்குத் தகுந்த பதிலடி கொடுத்தார்.
