“அண்ணே, இவங்க நம்மள பேனர் வைக்கவே விடல.. ரோடு போடவா விடுவாங்க?” அன்று முதல்வர் சொன்ன வார்த்தை… சட்டப்பேரவையில் அமைச்சர் ஆனந்த் பகிர்ந்த விஜய் படப்பிடிப்பு ரகசியம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அண்ணே, இவங்க நம்மள பேனர் வைக்கவே விடல.. ரோடு போடவா விடுவாங்க?” அன்று முதல்வர் சொன்ன வார்த்தை… சட்டப்பேரவையில் அமைச்சர் ஆனந்த் பகிர்ந்த விஜய் படப்பிடிப்பு ரகசியம்…!!

Published

on

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி ஊராட்சியில் உள்ள மலைக் கிராமத்திற்கு, நடிகர் விஜய்யும் தானும் ‘ஜனநாயகன்’ திரைப்படப் படப்பிடிப்பிற்காக கரடுமுரடான பாதையில் சென்ற அனுபவத்தை தவெக அமைச்சர் ஆனந்த் சட்டமன்றத்தில் பகிர்ந்து கொண்டார். படப்பிடிப்பு முடிந்து திரும்பும் போது, சாலை வசதி இல்லாத அந்த மோசமான பாதையில் விஜய் சுமார் ஒரு மணி நேரம் நடந்தே வந்ததாக அவர் குறிப்பிட்டார். அந்த மக்களின் அவதி நிலையை நேரில் கண்ட விஜய், நெகிழ்ச்சியடைந்து அங்கேயே ஒரு முக்கிய முடிவை எடுத்ததாக அமைச்சர் விவரித்தார்.

அப்பகுதியின் அவல நிலையைப் பார்த்த விஜய், தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து அங்குக் காதுகுத்து ரோடு அமைத்துக் கொடுக்கலாமா என்று தன்னிடம் கேட்டதாக ஆனந்த் தெரிவித்தார். அதற்குத் தான், “அண்ணே, இவங்க நம்மள பேனர் வைக்கவே விடல.. ரோடு போடவா விடுவாங்க?” என்று எதார்த்தமான அரசியல் சூழலை விஜய்யிடம் சுட்டிக்காட்டியதாகக் குறிப்பிட்டார். எதிர்க்கட்சியாக இருந்தபோது தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அரசியல் நெருக்கடிகளை நினைவுகூரும் வகையில் அமைச்சரின் இந்த உரை அமைந்திருந்தது.

Advertisement

இருப்பினும், அன்று கொடுத்த வாக்குறுதியின்படி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு அந்த மலைக் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஆனந்த் பெருமிதத்துடன் கூறினார். தற்போது தவெக அரசின் மூலம் ரூ. 5 கோடி செலவில் அந்த மலைக் கிராமத்திற்குப் புதிய சாலை போடும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் சட்டப்பேரவையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in