CINEMA
குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய திரை பிரபலங்கள்.. வெளியான அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்..!!

கேரள மாநிலத்தில் பாரம்பரிய சிறப்புமிக்க ஓணம் திருவிழா புராண மன்னர் மகாபலி கேரளாவுக்கு திரும்பியதை கொண்டாடும் விதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகை வந்துவிட்டால் கேரள பெண்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய முழுவதும் கலை கட்டும். பலரும் இந்த ஓனம் பண்டிகை கொண்டாடி வரும் நிலையில் தற்போது திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்கள் குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். அது தொடர்பான தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகர் மம்மூட்டி:
மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் மம்முட்டி பாரம்பரிய வேஷ்டி சட்டையில் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
நடிகர் பிரித்விராஜ்:
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகரான பிரித்விராஜ் தனது மனைவியுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
கம்பம் மீனா:
பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கம்பம் மீனா தற்போது ஷூட்டிங்காக கேரளா சென்றுள்ள நிலையில் அங்கு இனியாவுடன் சேர்ந்து ஓனம் கொண்டாடியுள்ளார்.
நடிகை அபிராமி:
90களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்த அபிராமி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் ஓணம் பண்டிகையை அழகாக கொண்டாடியுள்ளார்.
பாடகி சுஜாதா:
தமிழ் மட்டுமல்லாமல் பல தென்னிந்திய மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பாடகி சுஜாதா ஓணம் பண்டிகையை அழகாக கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகர் மோகன்லால்:
மலையாளத் திரை உலகில் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மோகன்லால் க்யூட்டான லுக்கில் ஓணம் பண்டிகையை கொண்டாடிய வீடியோவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
நடிகர் பிரணிதா சுபாஷ்:
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களின் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் தன்னுடைய மகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
பாடகி சித்ரா:
தென்னிந்திய திரை உலகில் முன்னணி பாடகியாக திகழ்ந்து கொண்டிருக்கும் பாடகி சித்ரா அனைவருக்கும் ஓணம் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
நடிகை நதியா:
தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள நடிகை நதியா தனது குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்.
ரித்திகா:
விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரித்திகா பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்துள்ளார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் தனது கணவருடன் சேர்ந்து முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
நடிகை காயத்ரி யுவராஜ்:
சீரியல் நடிகை ஆன காயத்ரி யுவராஜ் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நிலையில் நிறைமாத வயிற்றுடன் தனது கணவர் மற்றும் மகனுடன் சேர்ந்து ஓனம் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
மிர்ச்சி செந்தில்:
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அண்ணா சீரியலில் தற்போது மிர்ச்சி செந்தில் நடித்து வரும் நிலையில் தனது மனைவியுடன் சேர்ந்து ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
நக்ஷத்ரா:
யாரடி நீ மோகினி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில் தனது குழந்தையுடன் சேர்ந்து ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.