என்னது காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த ஹீரோ தானா?.. அவர் மட்டும் நடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும்..?? - cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னது காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த ஹீரோ தானா?.. அவர் மட்டும் நடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும்..??

Published

on

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இதனை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இதனிடையே பாசில் இயக்கத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காதலுக்கு மரியாதை. இது திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்த நிலையில் சிவக்குமார், ஸ்ரீ வித்யா மற்றும் ராதாரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்றுவரை விஜயின் திரை வாழ்க்கையில் இந்த திரைப்படம் முக்கியமான படங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. குறிப்பாக தளபதி விஜய் வெற்றி நாயகன் என்ற பெயர் எடுத்துக் கொடுத்த திரைப்படங்களில் காதலுக்கு மரியாதை திரைப்படம் ஒன்று. இந்நிலையில் காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் முதல் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது விஜய் கிடையாது என்ற ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Advertisement

அதாவது 90களில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்த நடிகர் அப்பாஸ் தான் முதன் முதலில் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்துள்ளார். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போக அவருக்கு பதிலாக விஜய் ஹீரோவாக நடித்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement