பாடிய பாடல்களுக்கு கிடைத்த பிரம்மாண்ட பரிசு..மும்பையில் ரூ. 30 கோடிக்கு அரண்மனை வாங்கிய ஸ்ரேயா கோஷல்… வியக்க வைக்கும் வசதிகள்.!!” – cinefeeds
Connect with us

CINEMA

பாடிய பாடல்களுக்கு கிடைத்த பிரம்மாண்ட பரிசு..மும்பையில் ரூ. 30 கோடிக்கு அரண்மனை வாங்கிய ஸ்ரேயா கோஷல்… வியக்க வைக்கும் வசதிகள்.!!”

Published

on

பிரபல பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல் மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் சுமார் ரூ. 29.7 கோடி மதிப்பிலான பிரம்மாண்டமான புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளார். இந்தியாவின் மிகவும் பிரபலமான பாடகிகளில் ஒருவரான இவர், தனது கடின உழைப்பால் ஈட்டிய வருமானத்தில் இந்த சொகுசு வீட்டை வாங்கியிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த புதிய வீடு மும்பையின் மிக முக்கியமான மற்றும் விலை உயர்ந்த இடமான பாந்த்ராவில் அமைந்துள்ளது. சுமார் 3,100 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டில் நவீன வசதிகள் மற்றும் பிரம்மாண்டமான பால்கனி வசதிகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அவர் முத்திரை வரி மற்றும் இதர கட்டணங்களாக மட்டும் சுமார் ரூ. 1.8 கோடியைச் செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

ஷ்ரேயா கோஷல் ஏற்கனவே மும்பையில் சொந்தமாக வீடு வைத்துள்ள நிலையில், தற்போது முதலீட்டு நோக்கிலும் மற்றும் கூடுதல் வசதிக்காகவும் இந்த புதிய வீட்டை வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி தேசிய விருதுகளை வென்றுள்ள இவருக்கு, திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in