விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை காரணம்?… பள்ளி மாணவிகளிடம் விசாரணை.. தடவியல் நிபுணர்கள் சோதனை..!! - cinefeeds
Connect with us

TRENDING

விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை காரணம்?… பள்ளி மாணவிகளிடம் விசாரணை.. தடவியல் நிபுணர்கள் சோதனை..!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியின் மகள் மீரா என்ற அதிகாலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் மீரா தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உடனே அவரை ஆழ்வார்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மீரா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த 17 வயதான மீரா திடீரென தற்கொலை செய்து கொண்ட நிலையில் இவரது தற்கொலை குறித்து சென்னை தேனாம்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நேரில் சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இது குறித்த விசாரணையை தேனாம்பேட்டை போலீசார் தற்போது தொடங்கியுள்ளனர்.

Advertisement

இந்த நிலையில் விஜய் ஆண்டனி இல்லத்திற்கு தடைய அறிவியல் துறையினர் நேரில் வந்து சோதனை நடத்தினர். தற்கொலை நடந்த இடத்தில் ஏதாவது ஆதாரங்கள் உள்ளதா என்று சோதித்தனர். மேலும் தற்கொலை எப்படி நடந்தது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்துள்ள நிலையில் தற்போது விசாரணை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் போலீசார் மீராவுடன் படித்த பள்ளி மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் முழு விவரமும் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement