TRENDING
எனக்கும் தற்கொலை எண்ணம் வந்துச்சு.. கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு… என்ன காரணம்..??

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். உலக அளவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் சுமார் 450 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் பிசியாக நடித்து வருகிறார். இயக்குனர் சங்கர் இயக்கும் இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இவரது மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. சமீபகாலமாக மாணவர்கள் மத்தியில் தற்கொலை எண்ணம் அதிகரித்து வருவதால் சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி எண்ணத்தை கடந்து வாழ்க்கையில் சாதிப்பது எப்படி என்பது குறித்து லயோலா கல்லூரி மாணவர்களுடன் நடிகர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.
அப்போது, சிறுவயதிலேயே சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தாலும் 21 வயது இருக்கும் போது சினிமாவே என்னை ஒதுக்கியது போல இருந்தது. அப்போது எனக்கும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் மனதில் தோன்றியது. ஆனால் என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் என்று தைரியத்துடன் கடைசி வரை முயற்சி செய்தேன். இப்போது உங்கள் முன்பு கமல்ஹாசன் ஆக நிற்கிறேன். மரணம் என்பது அனைவரது வாழ்விலும் கட்டாயம் வரக்கூடிய ஒன்றுதான். ஆனால் அதனை நாமாக தேடிச் செல்லக்கூடாது.
தற்கொலை எண்ணத்தை தாண்டி வாழ்ந்தவர்கள் பலர் சாதனையாளர்களாக உள்ளனர் என்று மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளுக்காக தெரிய முடிவை எடுக்கக் கூடாது என்றும் கமல்ஹாசன் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.