TRENDING
கோலாகலமாக நடைபெற்ற ‘தளபதி 68’ பட பூஜை…! பிரசாந்த், பிரபு, சினேகா , லைலா என குவிந்த திரைபிரபலங்கள்…!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இத்திரைப்படத்தில் இதுவரை டபுள் ஆக்ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தளபதி 68 வேலைகள் தொடங்கபட்டது. அதன்படி விஜய், வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் சவுதர் கலிபோர்னியா இன்ஸ்டியூட்டா ஃபார் க்ரியேட்டிவ் டெக்னாலஜி சென்டருக்கு சென்று சென்னைக்கு திரும்பினர். இதைத்தொடர்ந்து இன்று தளபதி 68 திரைப்படத்தின் பூஜை சென்னையில் பிரசாந்த் ஸ்டூடியோவில் நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை பாடல் காட்சி ஒன்று எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், நடிகர் பிரபு தேவா , நடிகர் பிரசாந்த், நடிகை லைலா , நடிகை சினேகா, நடிகை மீனாட்சி சவுத்ரி மற்றும் படக்குழுவினர்கள் பலரும் பங்கேற்றுள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் லியோ திரைப்படத்தை போலவே இந்த திரைப்படத்திற்கும் படக்குழுவினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லியோ திரைப்படத்தை முன்னிட்டு தளபதி 68 திரைப்படத்தின் பூஜை புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியிடப்படவில்லை. சமூக வலைதளத்தில் இனிமேல் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது நடிகர் வைபவ் தளபதி 68 படக்குழுவுக்கு வாழ்த்து கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…
Actor @actor_Vaibhav_ wishes Team Thalapathy 68 by posting a throwback pic with actor @actorvijay.@vp_offl #Thalapathy68 #Vijay #ThalapathyVijay #Vaibhav #VenkatPrabhu #Thalapathy #CinemaUpdate #Kollywood pic.twitter.com/osNbaXSEmP
— DT Next (@dt_next) October 2, 2023