LATEST NEWS
எதுக்கு அப்படி நடிச்சேன்னு ஃபீல் பண்றே….! இப்படித்தான் நான் சம்பாதிக்கிறேன்…. கண்ணீர் மல்க பேசிய மும்தாஜ்…!!!
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வந்து ரசிகர்களை கொள்ளை கொண்டவர் நடிகை மும்தாஜ். 20 வருடத்திற்கு முன்பு மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமான இவர் அதன் பிறகு மலபார் போலீஸ், குஷி, பட்ஜெட் பத்மநாதன், சொன்னால்தான் காதலா, வேடம், சாக்லேட் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். விஜய் நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் இவர் ஆடிய கட்டிப்புடி கட்டிபுடிடா என்ற பாடல் தற்போது வரை ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கின்றது.
தொடர்ந்து பல கவர்ச்சி படங்களில் இவர் நடித்திருக்கின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் கவர்ச்சியாக நடித்திருக்கின்றார். கடந்த எட்டு வருடங்களாக இவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை. கடைசியாக பிக் பாஸில் இவர் பங்கு பெற்றார். சமீபத்தில் சகிலா எடுத்த பேட்டி ஒன்று கலந்து கொண்டிருந்தார்.
அங்கு அவர் பேசும் போது கவர்ச்சியான உடைகளை அணிந்து நடனமாடி தவறு செய்து விட்டேன். தினமும் அதை பார்த்து அழுகிறேன். என்னிடம் மட்டும் நிறைய பணம் இருந்திருந்தால் அப்படத்தின் உரிமைகள் அனைத்தையும் வாங்கி என்னுடைய காட்சிகள் அனைத்தையும் நீக்கி இருப்பேன்.
ஆனால் தற்போது என்னால் முடியாது. இப்போது அல்லாவை மட்டுமே நான் நம்பி இருக்கிறேன். மேலும் தனக்கு சில ப்ரோபெர்ட்டிகள் இருக்கின்றது. அதிலிருந்து வாடகைகள் வருகின்றது. அதை வைத்து நான் சந்தோஷமாக இருந்து வருகிறேன் என்று பேசியிருந்தார். மேலும் என்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை தயவு செய்து பரப்பாதீர்கள் என்று கண்ணீர் மல்க பேசி இருந்தார்.