கேரள கோவிலில் நடிகை குஷ்புவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை…! ‘நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி இருக்கு’…! அவரே வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கேரள கோவிலில் நடிகை குஷ்புவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை…! ‘நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி இருக்கு’…! அவரே வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு…!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை குஷ்பூ. இவர் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். ரஜினி ,கமல், விஜயகாந்த் ,சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.

இவர் தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். திரையுலகின் உச்சத்தில் இருக்கும் பொழுது இயக்குனர் சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவருக்கு தற்பொழுது அவந்திகா , அனந்தித்தா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

Advertisement

ஒரு கட்டத்தில் குண்டாக இருந்த குஷ்பூவும் அவரது மகள்களும் தங்களது உடல் எடையை வெகுவாக குறைத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்ய புகைப்படங்கள் படுவைரலானது. இவர் நடிகையாக மட்டும் இன்றி தற்பொழுது பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பிலும் உள்ளார்.

தற்போது, திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் சிறப்பு பூஜை செய்ய, நடிகை குஷ்பு கட்டளைதாரராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஒவ்வொரு ஆண்டும், இந்த கோயிலில் சிறப்பு பூஜை செய்ய வருடத்திற்கு ஒரு பெண், கட்டளைதாரராக நியமிக்கப்படுவார். அந்தவகையில், இந்த முறை நடிகை குஷ்புவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பான புகைப்படங்களை நடிகை குஷ்பு தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் அந்த பதிவில், ‘நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி இருக்கு’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Kushboo Sundar (@khushsundar)

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in