“காக்கிச் சட்டைக்கே தலைக்குனிவு”.. லிஃப்ட் கொடுத்த ஓட்டுநரிடமே கைவரிசை காட்டிய சப்-இன்ஸ்பெக்டர்… ஓட ஓட விரட்டி வெளுத்த லாரி டிரைவர்.. எஸ்பி எடுத்த அதிரடி ஆக்சன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காக்கிச் சட்டைக்கே தலைக்குனிவு”.. லிஃப்ட் கொடுத்த ஓட்டுநரிடமே கைவரிசை காட்டிய சப்-இன்ஸ்பெக்டர்… ஓட ஓட விரட்டி வெளுத்த லாரி டிரைவர்.. எஸ்பி எடுத்த அதிரடி ஆக்சன்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் நீதிமன்றப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் கிரீஷ் மிஸ்ரா, அந்த வழியாக வந்த லாரி ஓட்டுநரிடம் லிஃப்ட் கேட்டுள்ளார். காவல்துறையின் சீருடைக்கு மதிப்பளித்த அந்த ஓட்டுநரும் அவரைத் தனது வாகனத்தில் ஏற்றியுள்ளார். ஆனால், அந்த சப்-இன்ஸ்பெக்டரின் பார்வை ஓட்டுநர் வைத்திருந்த ரூ.20,000 பணத்தின் மீது விழுந்துள்ளது. சமயம் பார்த்து அந்தப் பணத்தைத் திருடிய சப்-இன்ஸ்பெக்டர் மிஸ்ரா, லாரியிலிருந்து கீழே இறங்கி, தப்பிப்பதற்காக மற்றொரு வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளார். பணத்தைக் காணவில்லை என்பதை உணர்ந்த ஓட்டுநர், உடனடியாக அந்த வாகனத்தைத் துரத்திச் சென்று யமுனை பாலத்தின் மீது வைத்து சப்-இன்ஸ்பெக்டரை மடக்கிப் பிடித்துள்ளார்.

ஓட்டுநர் நடத்திய சோதனையில் சப்-இன்ஸ்பெக்டரின் பாக்கெட்டிலிருந்தே அந்த ரூ.20,000 பணம் கைப்பற்றப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், நடுரோட்டிலேயே அந்த சப்-இன்ஸ்பெக்டரை வெளுத்து வாங்கியுள்ளார். காவல்துறை சீருடையிலேயே சகட்டுமேனிக்கு அடி வாங்கிய இந்தச் சம்பவம், ஒட்டுமொத்த உபி போலீசாருக்கும் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, ஹமிர்பூர் எஸ்பி உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த சப்-இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட்செய்ததோடு, அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in