குதிரை பேரம்னு சொல்றீங்களே.. நீங்க அன்னைக்கு பண்ணுனது பெருச்சாளி பேரமா.? எங்க கட்சி MLA வை வச்சி.. திமுகவை கிழித்தெடுத்த வைகோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குதிரை பேரம்னு சொல்றீங்களே.. நீங்க அன்னைக்கு பண்ணுனது பெருச்சாளி பேரமா.? எங்க கட்சி MLA வை வச்சி.. திமுகவை கிழித்தெடுத்த வைகோ..!!

Published

on

“குதிரை பேரம் என்று வாய்க்கு வந்தபடி திமுக விமர்சிக்கிறது; ஆனால், எங்கள் கட்சி எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தது என்ன பெருச்சாளி பேரமா?” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கெல்லாம் திமுகதான் வழிகாட்டியது என்று சாடிய அவர், தமிழகத்தில் தலைவிரித்தாடிய கமிஷனுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் கூறினார்.

திமுகவின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய வைகோ, கடந்த காலங்களில் தங்களுக்குச் சாதகமாக அரசியல் லாபம் தேடிய திமுகவிற்கு தார்மீக உரிமை இல்லை என்று சுட்டிக்காட்டினார். மேலும், தற்போதைய விஜய் அரசு கமிஷன் கலாச்சாரத்தை ஒழித்து மக்கள் நலன் காப்பதாகப் பாராட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in