LATEST NEWS
கலாநிதி மாறன் மகள் திருமணம் கிரீஸ் நாட்டில் வைத்து நடந்தது ஏன்..? எவ்வளவு செலவு ஆச்சு..? வைகோ பரபரப்புப் பேட்டி..!!
சன் குழும நிறுவனர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரியுமான காவ்யா மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் திருமணம் கடந்த 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற்ற நிலையில், வெளிநாட்டில் திருமணத்தை நடத்தியதற்கான அவசியம் என்ன என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள சூழலில், இதுபோன்ற நிகழ்வுகளின் செலவுகள் குறித்து முன்வைக்கப்படும் அரசியல் விமர்சனங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய வைகோ, 1991 முதல் ஸ்டாலின் ஆட்சி முடியும் வரையிலான காலகட்டத்திற்கான குற்றப் புள்ளிவிவரங்களை வாரம், மாதம் மற்றும் ஆண்டு வாரியாகப் பட்டியலிட்டுப் பத்திரிகையாளர்களுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக எந்த மேடையிலும் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும், எதிர்தரப்பினர் நாள் மற்றும் தேதியைத் தெரிவிக்கலாம் என்றும் அவர் சவால் விடுத்தார்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்ந்த உயிரிழப்புகளில் அரசியல் மற்றும் காவல்துறையின் பொறுப்பு குறித்தும் கேள்வி எழுப்பிய அவர், அந்தச் சம்பவத்தைச் சாதாரணமாகக் கருத முடியாது என்று கூறினார். அப்பாவி மக்கள் உயிரிழந்த அந்தச் சம்பவம் தொடர்பான விவரங்களைத் தொகுத்திருப்பதாகவும், அதற்கான நாள், தேதி மற்றும் மேடையைத் தீர்மானிக்கலாம் என்றும் வைகோ குறிப்பிட்டார்.
