“இது என்னடா புது சோதனையா இருக்கு…” கள்ளச்சாராயம் குடிச்சுட்டு போதையில் வெறிபிடித்து அலையும் காட்டு யானைகள்… கதிகலங்கி நிற்கும் கிராம மக்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இது என்னடா புது சோதனையா இருக்கு…” கள்ளச்சாராயம் குடிச்சுட்டு போதையில் வெறிபிடித்து அலையும் காட்டு யானைகள்… கதிகலங்கி நிற்கும் கிராம மக்கள்..!!

Published

on

உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்ட வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் புதிய வடிவம் எடுத்துள்ளது. அமன்கர் புலிகள் காப்பகம் மற்றும் படாபூர்-ரேஹத் வனச்சரகங்களிலிருந்து கிராமங்களுக்குள் வரும் யானைகள், சட்டவிரோத கள்ளச்சாராயம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ‘லாஹன்’ குடிப்பதற்குப் பழகி வருகின்றன. காடுகளின் விளிம்புகளிலும் அடர்ந்த கரும்புத் தோட்டங்களிலும் சாராயக் கும்பல்கள் ரகசியமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக டிரம்களிலும் குழிகளிலும் இந்த லாஹனைத் தயாரிக்கின்றன.

இதன் கடுமையான மற்றும் இனிமையான வாசனை தொலைவிலேயே யானைகளைக் கவர்ந்து இழுக்கிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் யானைகள் டிரம்களை உடைத்து லாஹனைக் குடித்துவிட்டு போதையில் கட்டுப்பாட்டை இழக்கின்றன. சாதாரண நாட்களை விட போதையில் இருக்கும் யானைகள் சத்தம் எழுப்பினாலோ, தீப்பந்தம் காட்டினாலோ அஞ்சுவதில்லை என்றும், அவை கரும்பு, நெல் பயிர்களை உண்பதை விட மிதித்து அதிக சேதம் விளைவிப்பதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர். சமீபத்தில் படாபூர், ரேஹத் மற்றும் காதராபாத் பகுதிகளில் பல கிராமங்களில் டஜன் கணக்கான பீகா நிலங்களின் பயிர்கள் நாசமாகி விவசாயிகளின் ஓராண்டு உழைப்பு வீணாகி, உயிர்ப் பயமும் ஏற்பட்டுள்ளது.

Advertisement

வனத்துறை யானைகளைத் தடுக்கத் தவறுவதாகவும், கலால் துறை மற்றும் காவல்துறை கள்ளச்சாராய உற்பத்தியைக் கட்டுப்படுத்தத் தவறுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி, சட்டவிரோத இடங்களை உடனடியாக அழிக்கவும், ரோந்துப் பணிகளை அதிகரிக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். பிஜ்னோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே.கே. பிஷ்னோய், நாட்டுச் சாராயம் காய்ச்சுவோருக்கு எதிராகப் பத்து நாட்களுக்குள் சிறப்பு நடவடிக்கை எடுக்க அனைத்துக் காவல் நிலைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி வந்து லாஹன் குடித்துப் போதையாகி கோதுமை, கரும்பு, தீவனம், நெல் பயிர்களை மிதித்து சேதப்படுத்துவதாகவும், தகவல் கிடைத்ததும் கிராம மக்களின் உதவியுடன் வனத்துறை ஊழியர்கள் அவற்றை விரட்டுவதாகவும் பிஜ்னோர் டி.எஃப்.ஓ ஜெய் சிங் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in