CINEMA
தயாரிப்பாளர் பாலியல் இச்சைக்கு என்னிடம் அணுகினார்…. பகீர் கிளப்பிய நடிகை குஷ்பூ…!!
திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் பாலியல் இச்சைக்கு அணுகியதாக குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த நடிகை தான் குஷ்பூ. இவர் 1950 ஆம் வருடம் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதனை தொடர்ந்து 1990களில் முன்னணி ஹீரோயின் ஆக வலம் வந்தார். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்தார். இதற்கிடையில் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள்.
இந்த நிலையில் சமூக வலைதளங்கள், சினிமா, தொலைக்காட்சி, அரசியல், குடும்பம் என்று பிஸியாக இருக்கும் நடிகை குஷ்பு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தெலுங்கு படப்பிடிப்பில் மேக்கப் ரூமில் இருந்தபோது தயாரிப்பாளர் உள்ளே வந்தார். அப்போது செருப்பு அடி விழும் என எச்சரித்ததால் அவர் திரும்பி விட்டார். மேலும் தனது தந்தை 8 வயது முதல் 15 வயது வரை தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.