‘கருப்பு 2′ பார்ட் கன்பார்ம்…!சிங்கம்’ படத்துக்கு அப்புறம் சூர்யாவுக்கு அமைந்த அதே மேஜிக்…!பாக்ஸ் ஆபீஸ் வசூலை பார்த்து மிரண்டு போன திரையுலக பிரபலங்கள்…! – cinefeeds
Connect with us

CINEMA

‘கருப்பு 2′ பார்ட் கன்பார்ம்…!சிங்கம்’ படத்துக்கு அப்புறம் சூர்யாவுக்கு அமைந்த அதே மேஜிக்…!பாக்ஸ் ஆபீஸ் வசூலை பார்த்து மிரண்டு போன திரையுலக பிரபலங்கள்…!

Published

on

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. த்ரிஷா, இந்திரன்ஸ், சுவாசிகா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் வெளியான 6 நாட்களிலேயே உலகளவில் ரூ.175 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி மற்றும் சூர்யாவின் மார்க்கெட் நிலவரம் குறித்துப் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் நேர்காணல் ஒன்றில் விரிவாகப் பகிர்ந்துள்ளார்.

சூர்யாவின் திரைப்பயணத்தில் இந்த வெற்றி மிக முக்கியமான ஒரு மைல்கல் என்று குறிப்பிட்டுள்ள தனஞ்செயன், “சூர்யாவுக்கு 13 வருடங்களுக்குப் பிறகுதான் ஹிட் கிடைத்துள்ளது என்று ஊடகங்கள் சொல்வது கொஞ்சம் ஓவரான விஷயம் என்றாலும், கடந்த சில வருடங்களில் வெளியான அவரது படங்களுக்கு நல்ல ஓப்பனிங் இருந்தும் பெரிய மாஸ் மற்றும் குடும்ப ஆடியன்ஸைக் கவரும்படியான வெற்றி கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை; அதை இந்த ‘கருப்பு’ படம் முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Advertisement

மேலும், ஒரு நடிகரின் உண்மையான மார்க்கெட்டை அவரது படத்தின் முதல் நாள் ஓப்பனிங் கலெக்ஷனே காட்டிவிடும் என்றும், சூர்யா படத்திற்கு மக்கள் திரையரங்கிற்கு வர இன்னும் தயாராக இருக்கிறார்கள் என்பதை இந்த வசூல் நிரூபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.”முன்பு சூர்யாவுக்கு ‘சிங்கம்’ படம் எந்த அளவிற்கு அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படியான பெரிய வெற்றியைத் தந்ததோ, அதேபோன்ற ஒரு வெற்றியை இப்போது ‘கருப்பு’ தந்துள்ளது.” – தயாரிப்பாளர் தனஞ்செயன்.

தற்போது தமிழ் சினிமாவிற்கு தியேட்டர்களில் பெரிய வெற்றிகள் தேவைப்படும் சூழலில், பெரும்பாலான படங்கள் ரூ.50-60 கோடியுடன் முடிந்துவிடுவதாகத் தனஞ்செயன் கவலை தெரிவித்துள்ளார். அந்தத் தொய்வை உடைத்து, ‘கருப்பு’ திரைப்படம் முதல் 3 நாட்களிலேயே ரூ.147 கோடியை அள்ளி உலகளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது தியேட்டர் வியாபாரத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது என்றும், இப்படம் நிச்சயமாக ஒட்டுமொத்தமாக ரூ.300 கோடி வசூலைத் தொடுவதோடு, தமிழ்நாட்டில் மட்டுமே ரூ.100 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

இப்படத்தின் இரண்டாம் பாகம் (கருப்பு 2) உருவாகுமா என்ற கேள்விக்குத் தனஞ்செயன் சுவாரசியமான விளக்கமளித்துள்ளார். “இப்போது வரும் பல படங்களில் இரண்டாம் பாகத்திற்கான ‘லீட்’ கொடுப்பது வழக்கமாகிவிட்டது; அதுபோலத்தான் இந்த படத்திற்கும் கொடுத்துள்ளனர். ஆனால், சூர்யா கைவசம் தற்போது பல படங்கள் இருப்பதால் அடுத்த 2 வருடங்களுக்கு அவர் மிகவும் பிஸியாக இருக்கிறார். அதேபோல் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியும் அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாக இருப்பதால், உடனே ‘கருப்பு 2’ வருமா என்று சொல்ல முடியாது; இப்போதைக்கு அது ஒரு ஐடியா மட்டும்தான்” என்று கூறி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in