LATEST NEWS
ஒரு வாரம் தான் டைம்… அதுக்குள்ள ஸ்டாலின் பெயரை சரியா வைக்காவிட்டால்… என்ன நடக்கும் தெரியுமா..? தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த தா.மோ. அன்பரசன்..!!
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பெயர் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவம் திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், சேதப்படுத்தப்பட்ட கல்வெட்டை இன்னும் ஒரு வாரத்திற்குள் அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என்று கெடு விதித்தார். அவ்வாறு ஒரு வார காலத்திற்குள் கல்வெட்டு சரிசெய்யப்படாவிட்டால், திமுக சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தாம் நேரில் பேசி முறையிட்டதாகவும், அதற்கு அதிகாரிகள் தரப்பில் ஒரு வாரத்திற்குள் கல்வெட்டு முழுமையாகச் சீரமைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
